அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601, திண்டுக்கல் .
Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - 624601, Dindigul District [TM032203]
×
Temple History
தல வரலாறு
பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்குக் கொடுக்க அவைகளைப் பொதிகைக்குக் கொண்டுப்போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட, அவைகளைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கிவைக்க அங்கு முருகன் கருணையினால் இவ்விடமே பொருந்தியதென்றும், இடும்பன் அதன் காரணம் நோக்கும் போது சிவகிரியின் மீது முருகன்கனிவாய்ச் சிறுவனாகக்குராமரத்தின் கீழ் தோன்றவும், அசுரனுக்கும், இளஞ்சேய்க்கும் போர் நிகழவும், அசுரன் உயிர்நீப்ப இடும்பியின் முறையீட்டால் உயிர் மீண்டும் பெறவும் அவன் பெற்ற இருவரத்தால் ஆண்டவன் மலையில் இடும்பன் சன்னதி என்ற இடத்தில் வாயில் காவலனாக ஒரு இடம் பெற்றுத்தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போன்று காவடியுடன் தமது பிரார்த்தனைகளைக் கொண்டு வரும் அடியார்கள் முருகன் அருள்...பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்குக் கொடுக்க அவைகளைப் பொதிகைக்குக் கொண்டுப்போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட, அவைகளைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கிவைக்க அங்கு முருகன் கருணையினால் இவ்விடமே பொருந்தியதென்றும், இடும்பன் அதன் காரணம் நோக்கும் போது சிவகிரியின் மீது முருகன்கனிவாய்ச் சிறுவனாகக்குராமரத்தின் கீழ் தோன்றவும், அசுரனுக்கும், இளஞ்சேய்க்கும் போர் நிகழவும், அசுரன் உயிர்நீப்ப இடும்பியின் முறையீட்டால் உயிர் மீண்டும் பெறவும் அவன் பெற்ற இருவரத்தால் ஆண்டவன் மலையில் இடும்பன் சன்னதி என்ற இடத்தில் வாயில் காவலனாக ஒரு இடம் பெற்றுத்தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போன்று காவடியுடன் தமது பிரார்த்தனைகளைக் கொண்டு வரும் அடியார்கள் முருகன் அருள் பெற வேண்டு மென்ற பிரார்த்தனையும் கைவரப்பெற்றது என்பது பழனி தலபுராணக் கூற்று.
தல பெருமை
திருக்கோயில்தலவரலாறுவிவரம் :
சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் பொதினி என்பதாகும். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று. வையாவிநாடு என்றும் ஆவிநாடு என்றும் இப்பகுதி சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. முருகனை வியந்துபாடும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிக்கும் ஆவினன்குடியே தற்காலப் பழனி நகரமாகும். ஆகும். அம்மை வள்ளியோடு காட்சியளித்ததாக நக்கீரர் குறிப்பிடுகின்றார். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் குறித்து திருமுருகாற்றுப்படையில் குறிக்கப்படவில்லை. நக்கீரருக்குப் பிறகு பதினென்சித்தரான போகரால் உருவாக்கப்பட்ட கோயிலே பாலதண்டாயுதபாணி எனப்படும் பழனியாண்டவர் மலைக்கோயிலாகும்.
வையாவிக்கோமான் எனப்படும் கடைஎழுவள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் பேகன் வாழ்ந்த ஊர் இதுவாகும். வையாவிநாட்டின் தலைநகரமாக பொதினி விளங்கியது. மயிலுக்குப் போர்வையத்தந்தவன் என இவர் புகழப்பெறுகின்றார். இவர் பிறந்த குடிஆவியர்குடி (ஆவினன்குடி) எனப்படும். எனவே அவர்பிறந்து ஊர் ஆவியர்...திருக்கோயில்தலவரலாறுவிவரம் :
சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் பொதினி என்பதாகும். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று. வையாவிநாடு என்றும் ஆவிநாடு என்றும் இப்பகுதி சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. முருகனை வியந்துபாடும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிக்கும் ஆவினன்குடியே தற்காலப் பழனி நகரமாகும். ஆகும். அம்மை வள்ளியோடு காட்சியளித்ததாக நக்கீரர் குறிப்பிடுகின்றார். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் குறித்து திருமுருகாற்றுப்படையில் குறிக்கப்படவில்லை. நக்கீரருக்குப் பிறகு பதினென்சித்தரான போகரால் உருவாக்கப்பட்ட கோயிலே பாலதண்டாயுதபாணி எனப்படும் பழனியாண்டவர் மலைக்கோயிலாகும்.
வையாவிக்கோமான் எனப்படும் கடைஎழுவள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் பேகன் வாழ்ந்த ஊர் இதுவாகும். வையாவிநாட்டின் தலைநகரமாக பொதினி விளங்கியது. மயிலுக்குப் போர்வையத்தந்தவன் என இவர் புகழப்பெறுகின்றார். இவர் பிறந்த குடிஆவியர்குடி (ஆவினன்குடி) எனப்படும். எனவே அவர்பிறந்து ஊர் ஆவியர் அல்லது ஆவினன்குடி எனப்பெயர்பெற்றது. வேள் ஆவிக்கோமான் எனவும் இவர்கள் பெயர்பெற்றனர். பேகனுக்குப் பின் வேள் ஆவிக்கோமான்பதுமன் என்பவரும் பொதினியைஆட்சிசெய்தார்.
சங்கஇலக்கியங்களில்ஒன்றானஅகநானூற்றின்
வண்டுபடத்ததைந்தகண்ணிஒண்கழல்
உருவக்குதிரைமழவர்ஓட்டிய
முருகன்நற்போர்நெடுவேள்ஆவி
அறுகோட்டியானைப்பொதினி (அகம். 1 : 1-4) என்றும்,
முழவுறழ்திணிதோள்நெடுவேள்ஆவி
பொன்னுடைநெடுநகர்ப்பொதினி (அகம். 61: 15-16)
என்றும் நக்கீரர் குறிப்பிடுகின்றார், முருகன் உறைகின்ற தலமாகவும் இவ்வூர் பெரும்நகரமாகவும் செல்வச்செழிப்புடனும் விளங்கியதை பொன்னுடைநெடு நகர் பொதினி என்றும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது.
கொங்குநாட்டின் எல்லையைக் குறிப்பிடும் பாடல்களில் பழனி பகுதி அந்நாட்டின் தொற்குப் பகுதியாக அமைந்துள்ளது. பழம்பாடல்களில் வைகாவூர் தெற்கு என்றும் கொங்கு மண்டல சதகத்தில் தெற்குப் பழனி எனவும் இப்பகுதி வழங்கப்பெற்றது.
சங்ககாலத்தில் தமிழகத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பகுதியாக விளங்கியது. தமிழகத்தின் கீழைப் பகுதியில் இருந்து பெருவழி இவ்வூரின் வழியாக சென்றுள்ளது. வணிகர்கள் இவ்வூரின் வழியாக மேலைகடற்கரையில் அமைந்துள்ள சேரர்களின் துறைமுக நகரமாக விளங்கிய முசிறிக்கும் பிற துறை முகங்களுக்கும் செல்லும் பெருவழி இவ்வூரின் வழியாகவே சென்றன. இப்பகுதியிலும் மலைப்பகுதியிலும் மிளகு மற்றும் நறுமனப்பொருள்கள் பெருமளவில்விளைந்தன. இவற்றை வாங்கிச்செல்ல ரோமானிய வணிகர்கள் இந்நகரின் வழியாகவே வந்துள்ளனர். விட்டு விட்டு தொடரும் மலைப்பகுதியிலும் சமவெளிப்பகுதியிலும் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்ததடையங்கள் தாண்டிக்குடி, பொருந்தல் ஆகிய ஊர்களில்நடந்த அகழாய்வுகளின் மூலம் தெரியவருகின்றது. மேலும் இப்பகுதியில் பெருமளவில் உரோமானியர் வெளிட்ட பொற்காசுகள் மிகுந்த அளவில்கிடைத்துள்ளன. இதன் மூலம் வளம்மிக்க பகுதியில் பழனி இருந்துள்ளமை தெரியவருகிறது.
தல விருட்சம்.-
தல வகை விளக்கம் - பிரார்த்தனை ஸ்தலம்
தல விருட்சம் : கடம்பம் மரம்
தல தீர்த்தம்.- சண்முகநதி தீர்த்தம்
ஆகமம்- ஆகமம் வகை-சைவ ஆகமங்கள்
ஆகமம்- குமாரதந்திர ஆகமம்
பாடல் பெற்ற விவரம்
1.திருப்புகழ்,
2.பழனிதிருவாயிரம்
3.பழனிப்பதிகம், பழனி நான்மணிமாலை, திருப்பழனி வெண்பா, பழனி வெண்பா அந்தாதி, பழனாபுரிமாலை பழனிக்கோயில் விண்ணப்பம்
4.பழனிப்பிள்ளைத் தமிழ்
5.குமார விசையகிரிவேலச்சின்னோவையன்
6.மயில்விடுதூது
7.பழனித் தலபுராணம்
தொடர்புடைய அருளாளர்
1.அருணகிரிநாதர்
2.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
3.மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
4. சமீன் விசயகிரி வேலச்சின்னோவையன்
5.வையாபுரிப் பள்ளு
6.கு.நடேசகவுண்டர்
7.பாலசுப்பிரமணியக் கவிராயர்
இலக்கிய பின்புலம்
திருமலையின்சிறப்பு :
திருவருள்ததும் பியதுதமிழகம், சேரனும், பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு வைகாவூர் நாட்டுப்பழம் பதியாகிய பழனி காலவரையறைக்கு உட்படாத பழமையும், பெருமையும் உடையது. தமிழ் இலக்கியங்களில் சித்தன்வாழ்வு எனச்சிறப்பிக்கப் பெற்றது. மலைமேல்மருந்தாகிய ஞானதண்டாயுதபாணியின் அருள் திருமேனியை நிர்மாணித்தகாலம் காலவரையறையில் அகப்பட்டதன்று. அத்திருமேனியைத் தரிசித்த பேறானது மக்களின் பிறவிப் பிணியை அகற்றி உலகப்பெரும் பேற்றில் இன்றும் என்றும் ஈடுபடுத்துவது ஆகும்.திருமலையின்சிறப்பு :
திருவருள்ததும் பியதுதமிழகம், சேரனும், பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு வைகாவூர் நாட்டுப்பழம் பதியாகிய பழனி காலவரையறைக்கு உட்படாத பழமையும், பெருமையும் உடையது. தமிழ் இலக்கியங்களில் சித்தன்வாழ்வு எனச்சிறப்பிக்கப் பெற்றது. மலைமேல்மருந்தாகிய ஞானதண்டாயுதபாணியின் அருள் திருமேனியை நிர்மாணித்தகாலம் காலவரையறையில் அகப்பட்டதன்று. அத்திருமேனியைத் தரிசித்த பேறானது மக்களின் பிறவிப் பிணியை அகற்றி உலகப்பெரும் பேற்றில் இன்றும் என்றும் ஈடுபடுத்துவது ஆகும்.
புராண பின்புலம்
விஜயநகரப்பேரரசு :
விஜய நகரப்பேரரசின் அரசர்களான மல்லிகார்ஜுனர் மற்றும் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மல்லிகார்ஜுனராயர் காலத்தில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் மூன்று சந்திகளும் மஹாபூஜையாக விளங்க வேண்டும் என்பதற்காக நிவந்தங்கள் அளிக்கப்படுகின்றன. சுவாமியின் திருமுன்பு அமுதுபடைக்கவும் திருநந்தாவிளக்கு எரிக்கவும் திருமாலை திருமஞ்சனம் செய்யவும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு அளிக்கப்பட்ட நிலமானது இரவிமங்கலம் ஊருக்கு மேற்கிலும் கொழுமத்திற்கு போகும் சாலைக்கு தெற்கிலும் பன்றிமலைச் சாலைக்கு தெகிலும்அமைந்திருந்தது.விஜயநகரப்பேரரசு :
விஜய நகரப்பேரரசின் அரசர்களான மல்லிகார்ஜுனர் மற்றும் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மல்லிகார்ஜுனராயர் காலத்தில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் மூன்று சந்திகளும் மஹாபூஜையாக விளங்க வேண்டும் என்பதற்காக நிவந்தங்கள் அளிக்கப்படுகின்றன. சுவாமியின் திருமுன்பு அமுதுபடைக்கவும் திருநந்தாவிளக்கு எரிக்கவும் திருமாலை திருமஞ்சனம் செய்யவும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு அளிக்கப்பட்ட நிலமானது இரவிமங்கலம் ஊருக்கு மேற்கிலும் கொழுமத்திற்கு போகும் சாலைக்கு தெற்கிலும் பன்றிமலைச் சாலைக்கு தெகிலும்அமைந்திருந்தது.